தொங்கு சட்டப்பேரவை என்றால் என்ன? பெரும்பான்மை அரசை அமைப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச இடங்களை எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியும் பெறாதபட்சத்தில் ஏற்படுவது தொங்கு சட்டப்பேரவை எனப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால் மாநிலத்தில் “தொங்கு சட்டப்பேரவை” அமைவது உறுதியாகியுள்ளது. மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் அவசியமான நிலையில் புதிய கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகம் (தவெக) அதிகபட்சமாக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை எட்டவில்லை.

இதனால் அரசியல் சூழல் மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. வழக்கமாக இத்தகைய நிலைகளில் அதிக இடங்கள் பெற்ற கட்சியையே ஆளுநர் முதலில் அரசு அமைக்க அழைப்பார் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாகும். ஆனால் தவெக முன்கூட்டியே எந்த கூட்டணியிலும் இணைக்கப்படாததால் திராவிட முன்னேற்ற கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்ந்த கட்சிகள் ஆதரவு வழங்குமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது

பெரும்பான்மை இல்லாத இந்த நிலைதான் “தொங்கு சட்டப்பேரவை” என அழைக்கப்படுகிறது அதாவது எந்தக் கட்சியும் தனியாக ஆட்சி அமைக்க முடியாத சூழல். இந்நிலையில் கட்சிகள் இடையே பேச்சுவார்த்தைகள் ஆதரவு அல்லது புதிய கூட்டணிகள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தமிழக அரசியலில் அடுத்த கட்டம் எவ்வாறு நகரும் என்பது தற்போது பரபரப்பான எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading