தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்று, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 108 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் சூழலில் த.வெ.க. பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்து தங்கள் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்க்கு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த சந்திப்பின் போது த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் உடனிருந்தனர். விஜய்யின் கோரிக்கையைத் தொடர்ந்து ஆளுநர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.









Leave a Reply