அதே நேரத்தில் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள் முன்பைவிட இப்போது அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். முன்னதாகவும் அவர் இதேபோன்ற கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருந்ததுடன் கடந்த மாதம் சமூக ஊடகங்களில் ஒரு முழு நாகரிகமே அழிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
இதற்கிடையில் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து அமெரிக்க இராணுவம் ஏழு ஈரானிய படகுகளை சுட்டு வீழ்த்தியதாக ட்ரம்ப் ‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தை எட்டுவது அல்லது மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிப்பது ஆகிய இரு தேர்வுகள் மட்டுமே உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


































