இந்தச் செய்தி வெளியானதும், உலக சந்தைகளில் அச்சம் அதிகரித்து, எண்ணெய் விலைகள் வேகமாக உயர்ந்தன. குறிப்பாக மத்திய கிழக்கு பகுதியில் ஏற்படும் எந்த பதற்றமும் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை பாதிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
மேலும் ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மீண்டும் மோசமடைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலை தொடருமானால், உலக பொருளாதாரத்திலும், குறிப்பாக எரிபொருள் சார்ந்த செலவுகளிலும் அதிக பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.































