அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த தாக்குதல் சமீபத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என குற்றஞ்சாட்டியுள்ளார். இதேவேளை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பகுதிகளில் சேதம் ஏற்பட்டதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ள நிலையில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் கடற்பாதை உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமாக இருப்பதால் இந்த புதிய இராணுவ நடவடிக்கை சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மற்றும் உலக எரிசக்தி சந்தைகளில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






























