ட்ரம்பின் கூற்றுப்படி நான்கு ட்ரோன்கள் ஏவப்பட்டதில் ஒன்று கப்பலைத் தாக்கியதுடன் மற்ற மூன்று இடைமறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து ஓமான் கடல்பகுதி வழியாக மாற்றுப் பாதையை பயன்படுத்தும் முயற்சிக்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சர்வதேச கப்பல் போக்குவரத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் உலக எண்ணெய் சந்தையும் கவனமாக இந்த நிலைமையை கண்காணித்து வருகிறது. இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடவில்லை.




























