மத்திய கிழக்கில் ஈரான் போர்பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பிரச்சினை உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானின் சமாதான முன்மொழிவை “ஏற்க முடியாதது” என நிராகரித்ததுடன் தேவையானால் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதேவேளை ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியுடன் கடந்து செல்கின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக உலக எண்ணெய் சந்தையில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டுள்ளதுடன் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. மற்றொரு புறம் தென் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாக லெபனான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் மருத்துவ உதவி பணியாளர்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் – லெபனான் இடையிலான இடைக்கால போர்நிறுத்தம் தொடர்ந்தாலும் எல்லைப்பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அமெரிக்கா சீனா மற்றும் வளைகுடா நாடுகள் இடையே தீவிர இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை திறந்திருக்க வேண்டும் என்பதில் உலக சக்திகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.













Leave a Reply