ஐரோப்பிய வெப்ப அலை, சுவிட்சர்லாந்தின் பாசெல் (Basel) நகரில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து 38.8°C பதிவாகியுள்ளது. இது அந்தப் பகுதியில் ஜூன் மாதத்தில் இதுவரை பதிவான மிக உயர்ந்த வெப்பநிலையாகும் என்று சுவிஸ் வானிலை சேவையான MeteoSwiss தெரிவித்துள்ளது. முந்தைய நாளில் பதிவான சாதனையையும் இது முறியடித்துள்ளது.
ஐரோப்பாவை தாக்கியுள்ள கடுமையான வெப்ப அலை காரணமாக சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் அதிக வெப்ப எச்சரிக்கைகள் தொடர்கின்றன. சுகாதார அதிகாரிகள் குழந்தைகள் முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் வீட்டிற்குள் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.





Leave a Reply