சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

எந்த நாட்டும் அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது – Donald Trump.

அமெரிக்க அதிபர் Donald Trump சமீபத்தில் ஈரானுடன் நடைபெற்று வரும் பதற்ற நிலை குறித்து முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். ஈரானுக்கு எதிராக அணு ஆயுதம் பயன்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு அவர் கடுமையாக பதிலளித்து அதனை “முட்டாள்தனமான கேள்வி” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்கா ஏற்கனவே பாரம்பரிய இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஈரானை மிகவும் பலவீனப்படுத்தி விட்டதாகவும் அதற்காக அணு ஆயுதம் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் உலகில் எந்த நாட்டும் அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கிடையிலான மோதல் தொடர்ந்து இருந்தாலும் நிரந்தர சமாதான ஒப்பந்தத்தை உருவாக்குவது தான் தனது நோக்கம் என டிரம்ப் கூறினார். உடனடி உடன்படிக்கை செய்வதற்கான வாய்ப்பு இருந்தாலும் நீடித்த தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவசரப்பட விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய தற்காலிக சமாதான காலத்தில் ஈரான் மீண்டும் ஆயுதங்களை சேகரித்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் அமெரிக்க இராணுவம் அவற்றை குறுகிய நேரத்தில் அழிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்