பிரான்சின் SNCF ரயில்வே நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பிரான்சின் SNCF ரயில்வே நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர் சங்கங்கள் ஜூன் 10ஆம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

முக்கியமான நான்கு தொழிற்சங்கங்களான CGT-Cheminots, Sud-Rail, Unsa-Ferroviaire மற்றும் CFDT-Cheminots ஆகியவை இணைந்து இந்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

நிறுவனத்தில் நடைபெறும் மறுசீரமைப்புகள் ஊழியர்களின் மனநலம் மற்றும் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் பணியிடக் குறைப்புகள் வேலை அழுத்தம் கட்டாய இடமாற்றங்கள் மற்றும் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளும் இந்த போராட்டத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading