பிரான்ஸில் வருடத்திற்கு ஒருமுறை பயணம் செய்ய விரும்பும் நபர்களுக்கு SNCF வருடாந்திர விடுமுறை டிக்கெட் (Billet de congé annuel) மூலம் 25% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த சலுகையை பெற பயணம் குறைந்தது 200 கிலோமீட்டர் (சென்று-வர) இருக்க வேண்டும். இந்த தள்ளுபடியை தனிநபர் மட்டுமின்றி, அவருடன் ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பத்தினரும் பயன்படுத்தலாம். அதாவது, வாழ்க்கைத்துணை, 21 வயதிற்கு குறைவான குழந்தைகள் மற்றும் திருமணம் ஆகாதவர்களுக்கு பெற்றோரும் இந்த சலுகையில் சேர்க்கப்படலாம்.

இந்த தள்ளுபடியைப் பெற முதலில் SNCF இணையதளத்தில் உள்ள congé annuel விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் அதனை ஆன்லைன் chatbot Tout’Oui மூலம் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பம் உறுதிசெய்யப்பட்ட பிறகு தொலைபேசி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் டிக்கெட்டை வாங்க முடியும். இந்த திட்டம் பிரான்ஸில் உள்ளவர்களுக்கு குறைந்த செலவில் விடுமுறை பயணத்தை மேற்கொள்ள உதவும் ஒரு முக்கியமான வசதியாகும்.






























