“விடைபெற வேண்டிய நேரத்தை நாமே தேர்வு செய்வது ஒரு விசேஷம்” மற்றும் “அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை” போன்ற வாசகங்கள் அந்த குறிப்பில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குறிப்பு எப்ஸ்டீனின் முன்னாள் சிறை அறை தோழரான நிக்கோலஸ் டார்டக்லியோனிடம் இருந்து கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் பின்னர் தனது வழக்கறிஞர் மூலம் அந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
எனினும் இந்த குறிப்பு உண்மையில் எப்ஸ்டீன் எழுதியதா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. 2019ஆம் ஆண்டு பாலியல் கடத்தல் மற்றும் சிறுமிகளை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொண்டிருந்த எப்ஸ்டீன் நியூயோர்க் சிறையில் உயிரிழந்தார்.
அவரது மரணம் தற்கொலை என அறிவிக்கப்பட்டாலும் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் சிறை கண்காணிப்பு தவறுகள் காரணமாக பல சர்ச்சைகளும் சதி கோரிக்கைகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த குறிப்பு, எப்ஸ்டீன் மரணத்தைச் சுற்றியுள்ள விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.






























