அற்புதம் நடக்கப் போகுது இந்தியாவே வியந்து பார்க்கும் கணித்தார் செங்கோட்டையன்முன்னாள் அமைச்சரும் தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் “அற்புதம் நடக்கப் போகிறது இந்தியாவே வியந்து பார்க்கும்” என்று தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது ஒவ்வொரு தேர்தலிலும் கருத்துக் கணிப்புகள் மாறுபடுவது வழக்கம் இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பஞ்சாப் போன்ற இடங்களிலும் இது நடந்துள்ளது. கருத்துக் கணிப்புகள் சிலரின் கருத்தை மட்டுமே பிரதிபலிக்கும்ஆனால் மக்கள் அலை என்பது மிகப்பெரியது.

இம்முறை தமிழகத்திலும் இந்திய வரலாற்றிலும் இல்லாத அளவுக்கு மக்கள் அலை உருவாகும் என அவர் கூறினார். மேலும், பசுமை புரட்சி, வெண்மை புரட்சி போன்ற பல புரட்சிகள் நடந்துள்ள நிலையில், தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் “விசில் புரட்சி” உலகளவில் கவனம் பெறும் எனவும் தெரிவித்தார்.

விஜய் 200 இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தை ஆள்வார் என்றும், இது மக்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும் என்றும் அவர் கூறினார். மே 4ஆம் தேதி இந்தியாவே வியக்கும் வகையில் பெரும் ஆதரவு வெளிப்படும் அற்புதம் நிகழும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading