கிறிஸ்துமஸ் காலத்தை முன்னிட்டு தென் பிரான்சில் கடுமையான வானிலை நிலவி வருகிறது. மெட்டியோ-பிரான்ஸ் (Météo-France) அறிவிப்பின்படி மொத்தம் 5 டிபார்ட்மென்ட்கள் பனி மற்றும் உறைபனி (Snow & Ice) எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.

இதில் Tarn மற்றும் Aveyron டிபார்ட்மென்ட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. இது கடும் பனிப்பொழிவு மற்றும் வழுக்கல் அபாயம் அதிகம் இருப்பதை குறிக்கிறது.
மேலும், Hérault, Aude மற்றும் Pyrénées-Orientales ஆகிய மூன்று அண்டை டிபார்ட்மென்ட்கள் மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
Hérault டிபார்ட்மென்டின் தலைநகரான Montpellier நகரில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையிலும், மேலும் வெள்ள அபாயத்துக்கான சிவப்பு எச்சரிக்கையிலும் (Red Flood Alert) வைக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வாளர்களின் கணிப்பின்படி, சில பகுதிகளில் 50 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





Leave a Reply