கிறிஸ்துமஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொது விடுமுறை நாட்களைக் காரணமாகக் கொண்டு வங்கிகளுக்கு இடையேயான (அனுப்புபவரும் பெறுபவரும் ஒரே வங்கியில் கணக்குகள் இல்லாத) வழக்கமான பரிமாற்றங்கள் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன. டிசம்பர் 25 (வியாழன்) மற்றும் டிசம்பர் 26 (வெள்ளி – பாக்சிங் டே) ஆகிய தினங்களில் ஐரோப்பிய மத்திய வங்கி இயக்கும் கட்டணத் தீர்வு அமைப்புகள் மூடப்பட்டிருப்பதால் இந்தத் தடை அமலாகிறது.
இதன் விளைவாக டிசம்பர் 25 முதல் 28 வரை மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு செய்யப்பட்ட பணப் பரிமாற்றங்கள் உடனடியாக செயல்படாது அவை டிசம்பர் 29 திங்கட்கிழமை மட்டுமே அமலுக்கு வரும். எனினும் ஒரே வங்கிக்குள் உள்ள உள் பரிமாற்றங்கள் இந்த காலத்திலும் வழக்கம்போல செயல்படும். அதேபோல் 24/7 செயல்படும் உடனடி பரிமாற்ற சேவைகள் தொடர்ந்தும் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்கும். மேலும் 2025 ஜனவரி 9 முதல் அனைத்து பிரெஞ்சு வங்கிகளிலும் உடனடி பரிமாற்றங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
2026 ஆம் ஆண்டிற்கான அட்டவணை படி, வார இறுதிகளுக்கு மேலாக பின்வரும் தேதிகளில் வங்கிகளுக்கு இடையேயான பரிமாற்றங்கள் செயல்படுத்தப்படாது, ஜனவரி 1 (புத்தாண்டு தினம்), ஏப்ரல் 3 (புதிய ஆண்டு/பொது விடுமுறை), ஏப்ரல் 6 (ஈஸ்டர் திங்கள்), மே 1 (தொழிலாளர் தினம்) மற்றும் டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்).





Leave a Reply