பிரான்சில் சாப்பிட வேண்டாம், அவசர எச்சரிக்கை.
பிரான்சில் பெரிய அளவில் உணவு பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரபலமான Herta லார்டன்ஸ் (lardons fumés) சில தொகுதிகளில் Salmonella பாக்டீரியா கண்டறியப்பட்டதால் அவற்றை உடனடியாக சாப்பிட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த பாதிக்கப்பட்ட லார்டன்ஸ் பாக்கெட்டுகள் 2026 ஏப்ரல் 9 முதல் மே 3 வரை பிரான்ஸ் முழுவதும் உள்ள Carrefour, Leclerc, Auchan, Intermarché உள்ளிட்ட பல பெரிய சூப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் 200g மற்றும் 250g (25% கூடுதல்) அளவிலான Herta லார்டன்ஸ் ஆகும். சில குறிப்பிட்ட லாட்டுகளில் பாக்டீரியா கண்டறியப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக அனைத்தும் திரும்ப பெறப்படுகின்றன.





Leave a Reply