Météo France வெளியிட்ட தகவலின்படி டிசம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் ஐந்து துறைகள் பலத்த காற்று காரணமாக மஞ்சள் எச்சரிக்கை (Vigilance Jaune) நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதில் Haute-Corse, Côtes-d’Armor, Finistère, La Manche, Morbihan ஆகிய துறைகள் அடங்குகின்றன. மேற்குக் காற்றின் தாக்கத்தால் உள்நாட்டு பகுதிகளில் சுமார் 50 km/h வேகமும், அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியில் 70 km/h வரை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ப்ரிட்டனி மற்றும் மாஞ்ச் கடற்கரைப் பகுதிகளில் 70 முதல் 90 km/h வரை பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.
இதனுடன் வடக்கு பிராந்தியங்களில் நாள் முழுவதும் மழை காணப்படும் எனவும், கடற்கரை பகுதிகளில் அலையொய்வு மற்றும் நீர்மூழ்கல் அபாயம் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடற்கரை நடைபாதைகளைத் தவிர்க்கவும், வெளிப்புற பொருட்களை உறுதியாக கட்டுப்படுத்தவும், வாகன ஓட்டத்தில் கவனமாக இருக்கவும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.





Leave a Reply