டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் இடையிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர் “இரு நாடுகளும் பல முக்கிய ஒப்பந்தங்களிலும் புரிந்துணர்வுகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளன” என டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை தைவான் விவகாரம் அமெரிக்கா–சீனா உறவுகளில் “மிக முக்கியமான மற்றும் மிக நுணுக்கமான பிரச்சினை” என ஷி ஜின்பிங் எச்சரித்ததுடன் தவறான அணுகுமுறைகள் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல்களுக்கும் வழிவகுக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ஈரான் தொடர்பான பதற்ற நிலையை குறைப்பதில் சீனா பங்கு வகிக்க முடியும் என டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது டிரம்ப் ஷி ஜின்பிங்கை செப்டம்பரில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





























