குவைத்தில் குடிநீர், குவைத்தில் பாட்டிலில் நிரப்பப்பட்ட குடிநீருக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்றும், மக்கள் தேவையற்ற அளவில் குவித்து வாங்குவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரே கொள்முதல் பில்லில் அதிகபட்சம் 5 கார்டன் மட்டுமே வாங்க அனுமதிக்கும் நடைமுறை தொடரும் என்றும் குவைத் சமூக விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை அனைத்து கூட்டுறவு சங்கங்களும் மற்றும் மத்திய சந்தைகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அமைச்சகத்தின் விளக்கப்படி, இந்தக் கட்டுப்பாடு குடிநீர் உற்பத்தி அல்லது விநியோக பற்றாக்குறையால் விதிக்கப்பட்டதல்ல. தொழிற்சாலைகள் வழக்கம்போல போதுமான அளவில் உற்பத்தி செய்து வருவதுடன், சந்தைகளுக்கும் கூட்டுறவு கடைகளுக்கும் தொடர்ந்து விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையின் நோக்கம் அனைவருக்கும் சமமான முறையில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதும், பதுக்கல் மற்றும் தேவையற்ற பீதி வாங்குதலைத் தடுப்பதுமாகும்.













Leave a Reply