விசாரணை அதிகாரிகளின் தகவலின்படி குறித்த நபர் சிறுவனை தொடர்புகொண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாய்லாந்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த வழக்கு குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தாய்லாந்து சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
































