அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிலை முடிவுக்கு வரும் வகையில் முக்கியமான சமாதான ஒப்பந்தம் உருவாகும் அறிகுறிகள் தென்படுகின்றன என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio தெரிவித்துள்ளார். ஸ்வீடனுக்கு பயணம் மேற்கொள்ளும் முன் ஊடகங்களிடம் பேசிய அவர் “சில நல்ல முன்னேற்றங்கள் காணப்படுகின்றன ஆனால் அதிக நம்பிக்கையுடன் இருக்க விரும்பவில்லை” என்று குறிப்பிட்டார். ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் நடுநிலை வகித்து வருவதாகவும் விரைவில் முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் விதிக்கும் முயற்சியை தொடருமானால் எந்தவொரு இராஜதந்திர உடன்பாடும் சாத்தியமற்றதாகிவிடும் என ரூபியோ எச்சரித்தார். உலக எண்ணெய் ஏற்றுமதியின் முக்கிய பாதையாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணை மீதான பதற்றம் காரணமாக உலக பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஈரான் அணு ஆயுதம் பெறாது என்ற உறுதி கிடைக்காவிட்டால் கடுமையான இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என மீண்டும் எச்சரித்துள்ள நிலையில் ஈரானும் அமெரிக்க தாக்குதல் மீண்டும் நடந்தால் “போரைக் பிராந்திய எல்லைகளைத் தாண்டி விரிவாக்குவோம்” என பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளது





Leave a Reply