அயர்லாந்தில் பாதுகாப்பு ஊழியர்கள் கட்டிப்பிடித்த நபர் உயிரிழப்பு
அயர்லாந்தின் டப்ளின் நகரில் பாதுகாப்பு ஊழியர்களால் தரையில் அழுத்திப் பிடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த காங்கோ வம்சாவளியைச் சேர்ந்த Yves Sakila என்ற 35 வயது நபரின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடை திருட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்ய முயன்ற போது பலர் இணைந்து அவரை தரையில் கட்டுப்படுத்தியதாகவும் சம்பவத்தின் போது அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகள் காட்டுகின்றன. பின்னர் அவர் மயக்கநிலைக்குச் சென்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் “அயர்லாந்தின் ஜார்ஜ் ஃப்ளாய்ட் தருணம்” என போராட்டக்காரர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். டப்ளின் பாராளுமன்றம் முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் கூடி நீதிக்கான கோஷங்களை எழுப்பியதுடன் இனவெறி மற்றும் அளவுக்கு மீறிய வன்முறை குறித்து கவலை வெளியிட்டனர். அயர்லாந்து பிரதமர் Micheál Martin சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார். Yves Sakila பல ஆண்டுகளாக அயர்லாந்தில் வாழ்ந்து வந்தவர் என்றும் அவரது மரணம் அந்நாட்டு குடியேற்ற சமூகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





Leave a Reply