சம்பவம் குறித்து முழுமையான ராணுவ விசாரணை மற்றும் பாதுகாப்பு ஆய்வை உடனடியாக நடத்துமாறு அவர் பிரான்ஸ் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை எப்படி தடுப்பது போன்ற விஷயங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மத்திய கிழக்கில் பிரான்ஸ் எந்த தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், அதன் ராணுவ நிலைபாடு “தற்காப்பு” நோக்கத்திலேயே இருப்பதாக மக்ரோன் தெரிவித்துள்ளார். தற்போது Iran தொடர்பான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அந்த போர் காரணமாக பிரான்ஸ் படைகளை தாக்குவது நியாயமானதல்ல என்றும் அவர் கூறினார். இந்த சம்பவம் மத்திய கிழக்கில் பணியாற்றும் வெளிநாட்டு படைகளின் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.




























