சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சுமார் 4 சதவீதம் வரை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் கடந்த ஏழு வாரங்களில் இல்லாத அளவுக்கு விலைகள் சரிந்துள்ளன. இதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 3.40 அமெரிக்க டொலர் அல்லது 3.6 சதவீதம் குறைந்து 90.85 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த ஏப்ரல் 17ஆம் திகதிக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த விலையாகக் கருதப்படுகிறது.

அதேவேளை WTI ரக மசகு எண்ணெயின் விலையும் ஒரு பீப்பாய்க்கு 3.71 அமெரிக்க டொலர் அல்லது 4.1 சதவீதம் குறைந்து 87.59 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த மே 29ஆம் திகதிக்குப் பின்னர் காணப்பட்ட மிகக் குறைந்த விலையாகும். உலகளாவிய பொருளாதார நிலைமைகள் மற்றும் எண்ணெய் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்