இதில் நீதித்துறை அமைச்சகம் குடியேற்றம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைச்சகம் சைப்ரஸ் போலீஸின் வெளிநாட்டவர் மற்றும் குடியேற்ற பிரிவு, விமான நிலைய எல்லை அதிகாரிகள் மற்றும் அகதி சேவை போன்ற பல அரசுத் துறைகளின் அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர். இந்த குழு வாரந்தோறும் கூடிவிட்டு ஒவ்வொரு நாடுகடத்தல் வழக்கையும் தனித்தனியாக ஆய்வு செய்து நிர்வாக தாமதங்களை குறைத்து விரைவாக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும்.
அரசு தரப்பினரின் தகவல்படி முக்கிய இலக்கு என்னவென்றால் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட நாடுகடத்தல் முடிவுகளை தேவையற்ற தாமதமின்றி நடைமுறைப்படுத்துவது மற்றும் அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச சட்டங்களையும் மதிப்பது ஆகும். கடந்த 2025 ஆம் ஆண்டில் சைப்ரஸ் 10,000க்கும் மேற்பட்ட குடியேறிகளை நாடு கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எல்லை கட்டுப்பாடுகள் காரணமாக புதிய அகதி விண்ணப்பங்களும் குறைந்துள்ளன.
ஆனால் இதுவரை நாடுகடத்தல் செயல்முறையில் முக்கிய பிரச்சினையாக இருந்தது தகவல் பரிமாற்றம் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பு குறைபாடு சிறைச்சாலைகள் நீதிமன்றங்கள் மற்றும் குடியேற்ற அலுவலகங்கள் வெவ்வேறு கணினி அமைப்புகளை பயன்படுத்துவதால் தகவல் பரிமாற்றம் தாமதமாகி பயண ஆவணங்கள் மற்றும் விமான ஏற்பாடுகள் செய்யும் செயல்முறை மெதுவாக இருந்தது புதிய குழு இந்த சிக்கல்களை சரி செய்து செயல்முறையை வேகப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.






























