குற்றக்கும்பல்களுக்கு எதிராக புதிய சட்டம் விரைவில்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என்றும் பாதாளக்குழுக்களுக்கு ஆதரவளித்த அரசியல் தரப்பினர் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பது ஆச்சரியமல்ல என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். கொழும்பில் இன்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டதாக கூறினார். […]
