மாகாணசபைத் தேர்தல் தாமதத்திற்கு ஆணைக்குழு பொறுப்பல்ல ரத்நாயக்க விளக்கம்
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை என்றும் தற்போதுள்ள சட்ட மற்றும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார். மாகாணசபைத் தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விரைவாக நடத்த […]
