இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்
தமிழ் திரையுலகின் போக்கையே மாற்றி அமைத்து கிராமிய வாழ்க்கையையும் மனித உணர்வுகளையும் இயல்பாக வெள்ளித்திரையில் பதிவு செய்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இன்று சென்னையில் காலமானார். அவருக்கு 84 வயதாகியது. வயது மூப்பு மற்றும் நீண்டகால உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. 1977ஆம் ஆண்டு வெளியான […]
