உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம் அமுலுக்கு முக்கிய வரி மாற்றங்கள் அறிவிப்பு
பாராளுமன்றத்தில் கடந்த மே 19 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஜூன் 3 ஆம் திகதி கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தியதன் மூலம் அது 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய சட்டம் வரி நிர்வாகத்தை நவீனமயமாக்குதல் வரி விதிமுறைகளில் தெளிவை […]
