யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கு – கழுத்து நெரித்தே படுகொலை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கழுத்து நெரித்தே கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் யாழ். நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். கடந்த மார்ச் 18ஆம் திகதி காணாமல் போன நிலையில் இருந்த விரிவுரையாளரின் சடலம் பின்னர் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் அவரது மகளும் மருமகனும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு நேற்று யாழ்ப்பாண […]
