மயிலிட்டியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம்
யாழ்ப்பாணம் வலி. வடக்கு மயிலிட்டி பகுதியில் காணி உரிமையாளர்களின் போராட்டம் ஐந்தாவது வாரமாகவும் தொடர்கிறது. உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தமது பாரம்பரிய காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் இராணுவத்தின் கொமாண்டோ பங்களா முன்பாக இன்று மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 1990ஆம் ஆண்டு யுத்த காலத்தில் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் தங்கள் காணிகளை மீளப் பெற முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். […]
