சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

யாழ்ப்பாணம் வலி. வடக்கு மயிலிட்டி பகுதியில் காணி உரிமையாளர்களின் போராட்டம் ஐந்தாவது வாரமாகவும் தொடர்கிறது. உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தமது பாரம்பரிய காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் இராணுவத்தின் கொமாண்டோ பங்களா முன்பாக இன்று மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 1990ஆம் ஆண்டு யுத்த காலத்தில் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் தங்கள் காணிகளை மீளப் பெற முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வலி. வடக்கின் 249, 256, 248, 251 மற்றும் 255 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களது 651 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் மக்கள் எதிர்வரும் வெசாக் தினத்தில் மயிலிட்டி முழுவதும் கருப்புக்கொடிகளை ஏற்றி பாரிய அளவிலான போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அனைவரும் நேரில் வந்து மக்களின் துயரத்தை காண வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்