இந்திய பிரதமர் Narendra Modi தனது ஐரோப்பிய பயணத்தின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நார்வே பிரதமருடன் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் “உலகின் சுதந்திரமான ஊடகங்களின் கேள்விகளை ஏன் எதிர்கொள்ளவில்லை?” என நார்வே பத்திரிகையாளர் ஒருவர் நேரடியாக கேள்வி எழுப்பியபோதும் மோதி பதிலளிக்கவில்லை. இதையடுத்து இந்திய எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடக வட்டாரங்களில் கடும் விவாதம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் Rahul Gandhi கேள்விகளை சந்திக்க பிரதமர் அஞ்சுவதாக விமர்சித்துள்ளார். அதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக விளக்கம் அளித்து ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான அரசியல் மற்றும் ஊடக நடைமுறைகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.













Leave a Reply