இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலைத்தன்மை, விவசாய உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து பிரதமர் Narendra Modi முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக சமையல் எண்ணெய் இறக்குமதி சார்பை குறைக்கும் நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு உர விநியோகத்தை உறுதிப்படுத்தும் திட்டங்கள் மற்றும் தங்கத்தின் பொருளாதார பயன்பாடு தொடர்பாக அவர் விளக்கம் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் விலை உயர்வுகள் இந்தியாவையும் பாதித்துள்ள நிலையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மக்களின் செலவுசுமையை குறைப்பதே அரசின் நோக்கமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் விவசாயத் துறைக்கு ஆதரவு வழங்குதல், உணவு பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நாட்டின் நிதி நிலைப்பாட்டை வலுப்படுத்துதல் ஆகியவை அரசின் முன்னுரிமைகளாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





Leave a Reply