சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

பிரான்சில் 2027 காலியாக இருக்கும் வீடுகளுக்கு புதிய வரி.

பிரான்சில் 2027, காலியாக இருக்கும் வீடுகளுக்கான வரி முறையில் 2027 முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு தனித்தனி வரிகள் — TLV (Taxe sur les logements vacants) மற்றும் THLV (Taxe d’habitation sur les logements vacants) — ஒன்றிணைக்கப்பட்டு புதிய ஒரே வரியாக மாற்றப்பட உள்ளது. இந்த மாற்றம் 2026 நிதிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இந்த புதிய “logements vacants” வரி வசிப்பதற்கு ஏற்ற நிலையில் இருந்தும் நீண்ட காலமாக காலியாக உள்ள வீடுகளுக்கு விதிக்கப்படும். வீடு மின்சாரம் நீர் கழிவறை போன்ற அடிப்படை வசதிகளுடன் இருந்தாலும் அது நீண்ட நாட்கள் யாரும் வசிக்காமல் இருந்தால் “vacant” என கருதப்படும்.

எந்த வீடுகள் இந்த வரிக்குள் வரும்?
  • Zone tendue எனப்படும் வீட்டு பற்றாக்குறை அதிகமான பகுதிகளில், ஒரு வீடு குறைந்தது 1 ஆண்டு காலியாக இருந்தால் தானாகவே இந்த வரி விதிக்கப்படும்.
  • மற்ற பகுதிகளில் உள்ளூர் நகராட்சி விரும்பினால் மட்டும் இந்த வரியை அமல்படுத்தலாம். அங்கு வீடு குறைந்தது 2 ஆண்டுகள் காலியாக இருக்க வேண்டும்.

இந்த வரி அந்த வீட்டின் valeur locative cadastrale (வாடகை மதிப்பீடு) அடிப்படையில் கணக்கிடப்படும்.

  • முதல் ஆண்டில் 17%
  • அடுத்த ஆண்டுகளில் 34%

என்ற விகிதத்தில் வரி விதிக்கப்படும். சில நகராட்சிகள் இதை மேலும் உயர்த்தவும் முடியும்.

யாருக்கு விலக்கு கிடைக்கும்?

கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் வரி செலுத்த வேண்டியதில்லை

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

  • வீடு விற்பனைக்கு அல்லது வாடகைக்கு வைத்திருந்தும் வாங்குபவர் / வாடகையாளர் கிடைக்காத நிலை
  • கடந்த காலத்தில் 90 நாட்களுக்கு மேல் யாராவது வசித்திருந்தால்
  • HLM சமூக வீடுகள் போன்ற சில வகை வீடுகள்

மேலும் வரி செலுத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்க அரசு மக்கள் கட்டாயமாக வழங்கும் déclaration d’occupation des biens immobiliers தகவல்களை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்