மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெருவைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் தமிழ்ச்செல்வனின் உடல், செப்டம்பர் 7-ம் தேதி முட்புதர் குட்டையிலிருந்து மீட்கப்பட்டது. அவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், வழக்கை கொலை வழக்காக மாற்றக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
உடலைப் பெற்றபோதும் போராட்டம் தொடரும் என அறிவிப்பு
உடலைப் பெற்றுக்கொண்ட பின்னர், நீதிக்கான கூட்டமைப்பினர் மருத்துவமனையிலிருந்து வைகை ஆறு தரைப்பாலம் வரை ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள பாளையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
தமிழ்ச்செல்வன் தொடர்பான Tamilselvan suspicious death case விசாரணையில் காவல்துறைக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறிய போராட்டக்காரர்கள், உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு, சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் பெண்கள் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

































