தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள டேவிட் & கோ அவென்யூ பகுதியில், கடந்த 2022ஆம் ஆண்டு ஏ டூ இசட் என்ற தனியார் பல்நோக்கு மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதன் பங்குதாரர்களான சரவணன் மற்றும் டாக்டர் இராமசாமி தரப்புக்கு இடையே கடந்த ஓராண்டாக வரவு செலவு மற்றும் நிர்வாகம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இருதரப்பும் சமரசமாக பேசித் தீர்க்க முயன்றபோது, டாக்டர் இராமசாமி தரப்புக்கு ரூ.24 கோடி வழங்குவதாக சரவணன் தரப்பு எழுதி கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக ரூ.5 கோடி, இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீட்டில் வைத்து வழங்கப்பட்டதாக சிபிசிஐடி விசாரணையில் சரவணன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரூ.3.25 கோடி ரொக்கமாகவும், ரூ.1.75 கோடிக்கு காசோலையாகவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிபிசிஐடி விசாரணையில் கைது
இந்த வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என அளிக்கப்பட்ட மனுக்களைத் தொடர்ந்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த 9ஆம் தேதி சுகுமாறனிடம் அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டபோது நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்த சுகுமாறன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கடந்த 10ஆம் தேதி நேரில் பார்வையிட்டு விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர், அக்டோபர் 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். Thanjavur bribe case விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





























