1974ஆம் ஆண்டு டோக்கியோவில் முதல் 7-Eleven கடை திறக்கப்பட்டதுடன் தரவுகளை பயன்படுத்தி பொருள் இருப்பு மேலாண்மை, தயாரான உணவுப் பொருட்கள் விற்பனை மற்றும் வேகமான விநியோக முறை போன்ற புதுமைகளை கொண்டு வந்து ஜப்பானின் சில்லறை வணிகத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். பின்னர் 2005ஆம் ஆண்டு Seven & i Holdings நிறுவனத்தை உருவாக்கி அதை உலகளாவிய வணிகக் குழுமமாக வளர்த்தார். 2016ஆம் ஆண்டு நிர்வாக முரண்பாடுகளுக்கு பின்னர் பதவியிலிருந்து விலகியிருந்தாலும் ஜப்பானின் வசதிக்கடைத் துறையின் “தந்தை” என அவர் பரவலாக மதிக்கப்பட்டார்.
ஜப்பானின் “7-Eleven புரட்சியின் தந்தை” தொஷிபுமி சுசூகி 93 வயதில் காலமானார்
ஜப்பானின் சில்லறை வணிக உலகை மாற்றியமைத்த முக்கிய தொழில் முனைவோரும் 7-Eleven Japan நிறுவனத்தை உருவாக்கியவருமான முன்னாள் Seven & i Holdings தலைவர் தொஷிபுமி சுசூகி 93 வயதில் காலமானார். இதய செயலிழப்பு காரணமாக மே 18ஆம் தேதி அவர் உயிரிழந்ததாக நிறுவனம் அறிவித்துள்ளது. 1932ஆம் ஆண்டு நாகானோவில் பிறந்த சுசூகி 1970களில் அமெரிக்காவின் Southland Corp நிறுவனத்துடன் இணைந்து ஜப்பானில் 7-Eleven கடை முறைமையை அறிமுகப்படுத்தினார்.


































