தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான வீரவன்ச, 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் இளவரசர் செயித் அல் ஹுசைனின் விஜயத்தின்போது நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக அழைக்கப்பட்டிருந்தார்.
வாகனக் கோளாறு என சட்டத்தரணி விளக்கம்
கொழும்பு தும்முல்ல பகுதியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அந்தப் போராட்டம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்கு வீரவன்ச ஆஜராகாததால், கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதராகமா கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் உத்தரவைப் பிறப்பித்தார்.
பின்னர் நீதிமன்றத்தில் விளக்கமளித்த அவரது சட்டத்தரணி மஞ்சுள பதிராஜ, வாகனம் பழுதடைந்ததால் வீரவன்ச சரியான நேரத்தில் வர முடியவில்லை எனத் தெரிவித்தார். Wimal Weerawansa arrest warrant உத்தரவைத் திரும்பப் பெறுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கை நாளை முறையான மனுவொன்றின் மூலம் முன்வைக்கப்பட வேண்டும் என பிரதான நீதிவான் தெரிவித்தார். அதுவரை கைது உத்தரவு நடைமுறையில் இருக்கும் என நீதிமன்றம் குறிப்பிட்டது.































