அமெரிக்கா, “Operation Midnight Hammer” என்ற பெயரில் ஈரானின் அணு ஆயுதத்தளங்களை கடந்த வாரம் தாக்கியது. இதற்கு பதிலாகவே ஈரான் இத்தாக்குதலை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.
மாலை 7:39 மணிக்கு தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 14 முதல் 19 ஏவுகணைகள் வரை பயன்படுத்தப்பட்டதாகத் தெரிய வந்தது.
கத்தாரின் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான ஏவுகணைகளை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தின. ஒரு ஏவுகணை மட்டுமே தரையை எட்டியதாக கூறப்படுகிறது. எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் இந்த தாக்குதலுக்கு முன் கத்தார் மற்றும் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை செய்திருந்ததாகவும், இது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடனும், ஒரு “கட்டுப்பாடுள்ள பதிலடி நடவடிக்கையாகவும்” இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த தாக்குதலை “மிகவும் பலவீனமான பதிலடி” எனக் குறிப்பிட்டு, ஈரானுக்கு முன் எச்சரிக்கை அளித்ததற்காக நன்றி தெரிவித்தார். தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் உச்சபாதுகாப்பு குழுவும் சந்தித்து ஆலோசனைகள் நடத்தியது. மற்றொரு பக்கம், ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 24 மணி நேரத்துக்குள் “phased ceasefire” (பகுதி பகுதியான சமாதான ஒப்பந்தம்) ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் ஒரு பெரிய போர் நடவடிக்கையாக அல்லாது, ஒரு “சின்ன சின்ன தாக்குதல்” (symbolic attack) என இராணுவ நிபுணர்கள் மதிப்பீடு செய்கிறார்கள். இருப்பினும், இது மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய ஒரு அபாயமான முன்னோட்டம் எனக் கருதப்படுகிறது.































