மூன்று கட்டங்களில் நடைபெறும் போட்டி
முதல் கட்டமான சூப்பர் சீரிஸில், தகுதி பெற்ற அணிகளில் தரவரிசையில் கீழ்நிலையில் உள்ள மூன்று அணிகள் தலா ஒரு முறை மோதும். இதில் முதலிடம் பெறும் அணி மட்டுமே அடுத்த கட்டத்துக்குச் செல்லும்.
இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள 12 அணிகள், தலா ஆறு அணிகள் கொண்ட இரு குழுக்களாகப் பிரிக்கப்படும். மொத்தம் 30 போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று அணிகளும், இரு குழுக்களிலும் சிறப்பாக செயல்படும் நான்காவது இட அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
மூன்றாவது கட்டமான சூப்பர் 7 சுற்றில் ஏழு அணிகள் மொத்தம் 21 போட்டிகளில் விளையாடும். இதில் முன்னிலை பெறும் நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். முதலிட அணி நான்காவது இட அணியையும், இரண்டாவது இட அணி மூன்றாவது இட அணியையும் எதிர்கொள்ளும். வெற்றியாளர்கள் இறுதிப்போட்டியில் உலகக் கோப்பைக்காக மோதுவார்கள்.
2027 ODI World Cup format, 2019 மற்றும் 2023 தொடர்களில் பயன்படுத்தப்பட்ட ஒரே 10 அணிகள் கொண்ட சுற்று முறைக்கு மாற்றாக அமைகிறது. அதிக நாடுகளுக்கு வாய்ப்பு வழங்குவதுடன், தொடக்கத்திலிருந்தே முன்னணி அணிகளுக்கு போட்டி அழுத்தத்தைத் தொடரும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.































