மசோதாவின் பிரிவுகளுக்கு நீதிமன்றம் வழங்கிய விளக்கம்
மசோதாவின் 3, 4, 6(0), 6(5) ஆகிய பிரிவுகள் அரசியலமைப்புடன் முரண்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, அவற்றை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.
அதேவேளை, 6 மற்றும் 7 ஆகிய பிரிவுகள் அரசியலமைப்பின் 12(1), 14(1)(a) ஆகிய பிரிவுகளுடன் முரண்படுவதால், 84(2) பிரிவின் கீழ் தேவைப்படும் சிறப்பு பெரும்பான்மை அவற்றுக்கு அவசியம் எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய வடிவிலுள்ள 7ஆவது பிரிவு 12(1) உடன் முரண்படுவதால், 81ஆவது பிரிவை நீக்கும் முன்மொழிவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
11(1) பிரிவின் கீழ் 88(1)(f) பிரிவை அறிமுகப்படுத்துவது அரசியலமைப்புக்கு முரண்பாடில்லை என்றும், குழுநிலையில் திருத்தம் செய்யப்பட்ட 11(2) பிரிவையும் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த Anti-Corruption Amendment Bill Sri Lanka விவகாரத்தில், 17ஆவது பிரிவு அரசியலமைப்பின் 4(c), 3 மற்றும் 13(2) பிரிவுகளுடன் முரண்படுவதாக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதனால், 17ஆவது பிரிவு சட்டமாக வேண்டுமெனில் 84(2) பிரிவின் கீழான சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதோடு, 83ஆவது பிரிவின் கீழ் மக்கள் வாக்கெடுப்பிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
































