சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனம் Blue Origin உருவாக்கிய New Glenn ராக்கெட் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற “ஹாட்-ஃபயர்” எனப்படும் தரைச் சோதனையின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ராக்கெட்டின் இயந்திரங்கள் தரையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில் இயக்கப்படும் இந்தச் சோதனையின் போது திடீர் “anomaly” ஏற்பட்டதாக Blue Origin கூறியுள்ளது. சம்பவத்தில் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ராக்கெட் அமேசானின் செயற்கைக்கோள் இணையத் திட்டத்திற்காக 48 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த தயாராக இருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது ஆனால் செயற்கைக்கோள்கள் அப்போது ராக்கெட்டில் பொருத்தப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன. சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் ராக்கெட் தீப்பந்தமாக வெடித்து பெரும் புகை மற்றும் தீச்சுவாலைகள் எழுந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. SpaceX நிறுவனத்துடன் போட்டியிட முயற்சிக்கும் Blue Origin நிறுவனத்திற்கு இது முக்கிய பின்னடைவாகக் கருதப்படுவதுடன் ராக்கெட்டின் எதிர்கால ஏவுதிட்டங்கள் மற்றும் நாசா தொடர்பான சந்திரன் திட்டங்களிலும் தாமதம் ஏற்படக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்