பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்யும் விதி நீக்கம்
அசெம்ப்ளி மசோதா 1267, பெற்றோர் அனுமதி மற்றும் நீதிமன்ற ஒப்புதலுடன் சிறார்களுக்கு திருமணம் செய்ய அனுமதித்திருந்த முந்தைய விதிகளை ரத்து செய்கிறது. இந்த மசோதாவை சாண்டா குரூஸ் தொகுதி ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கேல் பெல்லெரின் முன்மொழிந்தார்.
இந்தச் சட்டம் குழந்தைகளைப் பாதுகாக்க நீண்டகாலமாக தேவையான நடவடிக்கை என்று ஆளுநர் நியூசம் தெரிவித்துள்ளார். California child marriage ban அமலுக்கு வருவதற்கு முன்பு, 2000 முதல் 2021 வரை கலிபோர்னியாவில் சிறார்களை உள்ளடக்கிய சுமார் 35,000 திருமணங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை வயது குறைந்த சிறுமிகளுக்கும் வயது வந்த ஆண்களுக்கும் இடையே நடந்ததாக கூறப்படுகிறது.
குழந்தை திருமணத்தை எதிர்க்கும் அமைப்புகளும், கலிபோர்னியா பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை தொடர்பான ஆணையமும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தன. நடிகரும் செயற்பாட்டாளருமான கோர்ட்னி ஸ்டோடன், தனது 16 வயதில் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு, அனைத்து அமெரிக்க மாநிலங்களிலும் சிறார்களை திருமணத்திலிருந்து பாதுகாக்க தொடர்ந்து போராடப் போவதாக கூறினார்.
அமெரிக்காவில் 17 மாநிலங்கள் எந்த விதிவிலக்குமின்றி குழந்தை திருமணத்தைத் தடை செய்துள்ளன. மேலும் 32 மாநிலங்களில் சில நிபந்தனைகளின் கீழ் சிறார்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன.




























