சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

கனடா PR கட்டணம் உயர்வு.

கனடா அரசு (IRCC) வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி Permanent Residence (PR) விண்ணப்ப கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் அரசு சேவைகளின் செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் (inflation) காரணமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி கனடா PR கட்டணம் உயர்வு, Right of Permanent Residence Fee (RPRF) எனப்படும் முக்கிய கட்டணம் முன்னர் 515 CAD இருந்தது தற்போது 575 CAD ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் Express Entry, Federal Skilled Worker, Provincial Nominee போன்ற பல பொருளாதார குடியேற்ற திட்டங்களுக்கான விண்ணப்ப கட்டணம் 850 CAD இருந்து 950 CAD ஆக உயர்ந்துள்ளது.

அரசு பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை PR கட்டணங்களை பரிசீலித்து பணவீக்கத்தை கருத்தில் கொண்டு மாற்றம் செய்து வருகிறது. இந்த உயர்வு குடும்ப இணைப்பு (Family sponsorship), மனிதாபிமான விண்ணப்பங்கள் மற்றும் பல்வேறு குடியேற்ற திட்டங்களையும் பாதிக்கிறது.

இந்த மாற்றங்கள் புதிய விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் செலவாக இருக்கும். ஆனால் அரசு தரமான சேவையை வழங்கவும் விண்ணப்ப செயல்முறையை மேம்படுத்தவும் இந்த கட்டண உயர்வு அவசியம் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading