ஏலத்தில் அமெரிக்காவில் உள்ள 2.1 கோடிக்கும் அதிகமான பயனர் கணக்குகளின் உரையாடல் வரலாறுகள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 21 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் சிறார்களுடையவை. உரையாடல்கள் பயனர் சுயவிவரங்கள், IP முகவரிகள் மற்றும் பிற புவியியல் தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
சிறார் தரவு விற்பனைக்கு அதிகாரிகள் எதிர்ப்பு
சில பயனாளர்கள் உளவியல் ஆலோசகர்கள் அல்லது மருத்துவர்களாக தோன்றிய டிஜிட்டல் கதாபாத்திரங்களிடம் உணவு உண்ணல் குறைபாடுகள், சுய காயப்படுத்தல் மற்றும் தற்கொலை எண்ணங்கள் குறித்து பகிர்ந்ததாக கூறப்படுகிறது. சில உரையாடல்களில் பாலியல் உள்ளடக்கமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் உள் ஆபத்து மதிப்பீடுகளும் இந்த பதிவுகளில் இடம்பெற்றுள்ளன.
தனிப்பட்ட தரவை பணத்திற்கு விற்கமாட்டோம் என Character.AI-யின் தனியுரிமைக் கொள்கை கூறுகிறது. ஆனால் முன்மொழியப்பட்ட ஏல நிபந்தனைகள், அந்தக் கொள்கையை வாங்குபவர் பின்பற்ற வேண்டும் என்றும், தரவு நீக்கக் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். வாங்குபவர் பயனர் தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு மறுவிற்பனை செய்யவும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Character AI user data auction தொடர்பாக, சிறார்களின் உரையாடல்கள் மற்றும் பிற முக்கியமான தரவுகளை ஏலத்திலிருந்து விலக்க வேண்டும் அல்லது பயனாளர்களைப் பாதுகாக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அதிகாரிகள் பிணையியல் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர். நிறுவனம் அக்டோபர் 2026ல் அமெரிக்க பிணையியல் சட்டத்தின் 11ஆம் அத்தியாயத்தின் கீழ் பாதுகாப்பு கோரியிருந்தது.
இதனிடையே, Character.AI தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துகளின் சில பகுதிகளுக்கான காலவரையற்ற, பிரத்தியேகமற்ற உரிமத்தைப் பெற டிஸ்னி 2 கோடி டாலர் முன்மொழிந்துள்ளது. இந்த ஒப்பந்தம் பயனர் தரவுகள் மற்றும் செயலிக்கான தனி ஏலத்திலிருந்து வேறுபட்டதாகும்.





























