சிறுவன் அலறும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்தபோது, தமிழ்ச்செல்வன் அங்கிருந்து வெளியே ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் தருண் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது தாய் பூங்கொடி கதறி அழுதுகொண்டிருந்தார். சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்
தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், சிறுவனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், தருண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில், தமிழ்ச்செல்வன் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சிறுவன் கொலை செய்யப்பட்டதில் அவரது தாய் பூங்கொடிக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது. Chennai boy murder case தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.































