சீன அரசு நிர்ணயித்துள்ள ஆண்டு வளர்ச்சி இலக்கான 4.5% முதல் 5% வரம்பின் கீழ்மட்டத்தில் இந்தப் புதிய தரவு உள்ளது. நாட்டின் உள்நாட்டு நுகர்வு பலவீனமாக இருக்கும் நிலையில், ஏற்றுமதிகள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதரவாக அமைந்துள்ளன.
ஏஐ உபகரணங்களுக்கான உலகளாவிய தேவை
செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களில் பயன்படுத்தப்படும் கணினி சில்லுகள் மற்றும் பிற உதிரிபாகங்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்துள்ளது. இதனால் சீனாவின் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியின் முக்கிய இயக்கியாக மாறியுள்ளது. China economic growth-க்கு ஏற்றுமதி அளிக்கும் ஆதரவு, உள்நாட்டு சந்தைச் சவால்களை ஓரளவு சமநிலைப்படுத்தியுள்ளது.
சொத்து சந்தை வீழ்ச்சி, குறைந்த ஊதிய வளர்ச்சி மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பின்மை ஆகியவை சீன நுகர்வை பாதித்துள்ளன. இதற்கிடையில், கடந்த ஆண்டு பதிவான 1.2 டிரில்லியன் டாலர் வர்த்தக உபரியை சீனா மீறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பரில் சில நிறுவனங்களுக்கான குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் சொத்து வாங்குவோருக்கான மானியங்கள் உள்ளிட்ட ஆதரவு நடவடிக்கைகளை அரசு அறிவித்தது. அதேவேளை, மலிவான சீனப் பொருட்களின் அதிகரிப்பு தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கத்திய பொருளாதாரங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏஐ உள்கட்டமைப்பில் செய்யப்படும் பெரும் முதலீடுகள் எதிர்பார்க்கப்படும் லாபத்தை வழங்குமா என்பதிலும் கவலை நீடிக்கிறது.




























