காரைத் துரத்திச் சென்று போலீஸார் நடவடிக்கை
கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன், உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட போலீஸார் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். காரின் பின்புறம் இருந்த மூட்டைகளைச் சோதனையிட முயன்றபோது, அதில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் போலீஸாரைத் தள்ளிவிட்டு காரை வேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தலைமை காவலர் வேல்முருகன் காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துக் கொண்டார். கார் விளாங்குறிச்சி, காளப்பட்டி, சித்ரா வழியாக கணியூர் சுங்கச்சாவடியை கடந்து சுமார் 40 கி.மீ. சென்றது. தகவலறிந்த கணியூர் மற்றும் அவிநாசி போலீஸார், ஆம்புலன்ஸ் வாகனங்களின் உதவியுடன் அவிநாசி அன்னபூர்ணா ஹோட்டல் அருகே காரைச் சுற்றிவளைத்தனர்.
காரில் இருந்த இருவர் முதலில் தப்பியோடிய நிலையில், ஒருவர் பிடிபட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பாபு தாரா, ராஜேஷ், சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காரின் மேற்கூரையில் தலைமை காவலர் பயணித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இந்த Coimbatore gutka seizure நடவடிக்கையில் துணிச்சலுடன் செயல்பட்ட அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.






























