அரிவாளால் தாக்கியதாக காவல்துறை தகவல்
கடந்த 12ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணியளவில் சிறுமி கடத்தப்பட்டதாக கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சந்தோஷ் (24), தவசி (28) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சிறுமியை அழைத்துச் சென்று ஒரு வீட்டில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை மிரட்டப் பயன்படுத்திய அரிவாளை மறைத்து வைத்த இடத்தைக் காட்டுவதற்காக தவசியை காவல் குழுவினர் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் அரிவாளை எடுத்து காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
எச்சரிக்கையை மீறி மற்ற அதிகாரிகளையும் தாக்க முயன்றதால், உதவி காவல் ஆய்வாளர் சிலம்பரசன் பாதுகாப்பு கருதி தவசியின் இடது காலில் சுட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த தவசி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். Coimbatore police shooting சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






























